கோடீஸ்வரனாக

எண்கணித சோதிடர் ஏகாம்பரம்:
வாப்பா வடமலை. நலமா? நல்ல விசயமாத்தான் என்னைப் பார்க்க வந்திருப்ப. என்னன்னு சொல்லு.
@@@@@
சோசியல் ஐயா, எனக்கு வடமலைனு தமிழ்ப் பேரை வச்சு என் பெற்றோர் அசிங்கப்படுத்திட்டாங்க. அந்தப் பேரை மாத்தி முடியுமங்களா?
@@@@@@
சாமி பேருதான். 'ஏழுமலை'னு வச்சுக்கிறயா?
@########
அதுவும் தமிழ்ப் பேருதானே!
@@@@@@@@
அப்ப 'ஷப்தகிரி'னு மாத்திக்க. மூணு பேரும் ஒரே சாமி பேருதான்.
##############
சரி. ஐநூறு எடுத்து வை.‌
###########
இந்தாங்க சோசியரே. என் மனைவிக்கு நேற்று காலைல அஞ்சு மணிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குதுங்க ஐயா. அந்தக் குழந்தை இராசிப்படி பேரு, சாதிக் குறிப்பு எழுதிக் கொடுங்க.
@@@@@@@
புதன்கிழமை. பிரம்ம முகூர்த்தம். பிரமாதமான நேரம். இந்தக் குழந்தை ராசிப்படி 'ஆனி'னு முடியற மாதிரி பேரா வைக்கணும். அப்படி ஒரு பேரை வச்சா அவன் பல கோடிகளுக்கு அதிபதியான சிறப்பாக வாழ்வான்.
ஆனி மாசம். அருமையான பிறந்த நேரம். சரி, வடமலை, இல்லை, இல்லை ஷப்தகிரி நீ பயிர்த்தொழில் தானே செய்யற?
@@#######
ஆமாங்க ஐயா.
@@######
இப்ப உன் நிலத்தில் என்ன பயிர் செழிப்பான வளருது?
@@#######
கம்பு.
@######
அருமை. அருமை. கம்பு + ஆனி = கம்பானி.
உன் பையனுக்கு 'கம்பானி' எண்கணிதப்படியும், அவன் பிறந்த நாள், நேரம், இராசிப்படியும் அவனுக்கு 'கம்பானி'ங்கிற பேரை வச்சா இருபத்தி அஞ்சு வருசம் கழிச்சு தென்னிந்தியாவிலேயே பெரிய தொழில் அதிபராக இருப்பான். 'கம்பானி' இந்திப் பேருன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடு. சரி இந்தப் பேருக்கும் சாதகக் குறிப்புக்கும் ஆயிரம் ரூபாய் எடுத்து வை.
@@####
(பணத்தை ஷப்தகிரி கொடுத்து சாதகக் குறிப்பை வாங்கிக் கொண்டு) சரி. நான் வர்றேனுங்க ஐயா.
@@@##@@@
சென்று வா ஷப்தகிரி. நலம் உண்டாகட்டும்.

எழுதியவர் : மலர் (17-Sep-23, 8:59 pm)
சேர்த்தது : அன்புமலர்91
பார்வை : 44

மேலே