உழுதிடு உயிர் வாழ்ந்திடு

உழுதிடு உயிர் வாழ்ந்திடு
××××××××××××××××××××××
தொழுதிடும் கையும்
உழுதிடக் கலப்பையைத்
தழுவிடவே வயிற்க்கு
முழுமையான உணவே

புத்தகத்தைப் படித்து
புத்திசாலி யானாலும்
சித்தனாக மரத்தடியில்
புத்தனாக மாறினும்

குத்துக்கல்லாக வாழ்ந்திடச்
சத்தானச் சாப்பாட்டை
முத்தான விவசாயமே
நித்தம் தருமே

விளை நிலம்
கலையான வீடாயினும்
உளை வைக்க
விளைபொருள் வேண்டுமே

ஆடல் பாடலென
ஆயக்கலைக் கற்றாலும்
உயிர் வாழ
உழவனாகக் கற்றிடு

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (26-Sep-23, 10:18 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 68

மேலே