நெகிழிகள்
நெகிழிகள்
××××××××××
உண்டு கழித்து எறிந்த நெகிழிகள் /
உண்ட கால்நடைகளை பழிவாங்கும் எமன் /
மண்ணில் கலந்து மண்வளத்தை மலடாக்கி /
மழைநீர் உறிஞ்சும் ஊடுருவல் தடுத்து /
சாக்கடையில் அழகு கப்பலாய் பயணித்து /
கடலடைந்து மீன்களுக்கு இரையாகி இரையாக்கும் /
காற்றில் மிதந்து மூச்சாக மனிதன் /
காற்றுப்பை நுழைந்து மூச்சை நிறுத்தும் /
மஞ்சள் பையில் பார்க்காதே அவமானம் /
மண்வளத்தையும் உயிரினங்களையும் காப்பாற்றுவது தன்மானம் /
இன்று பயன்படுத்தும் நெகிழிகள் உன்னுடைய /
நாளைய வாரிசுகளுக்கு சேர்த்துவைக்கும் பகை /