நான் ரசிக்கும் இயற்கை

இயற்கை ஓர் அற்புதம்
பசுமைத் தரும் மரங்கள்
ஆயிரம் ஆயிரம், கொடிகள் ஆயிரம்
ஆயிரம் செடிகளும் அவ்வாறே
நதிகள் ஆயிரம், கடலும் பல பல
மலைகள் ஆயிரம் மேவிய
பள்ள தாக்குகளும்
பறவைகள், விலங்குகள்
ஆயிரம் ஆயிரம்
மனிதர்கள் பார்வைக்கு
ஒன்றுபோல் தோற்றம்
உண்மையில் பலர் பலர்
இப்படி ஒன்றாய், பலவாய்
ஒவ்வொன்றும் ஒருவிதமாய்
இருப்பது வினோதம்

இன்னும் விண்ணைக் கூர்ந்து பாருங்கள்
பலகோடி விண்மீன்கள் , கோள்கள்
வினோதமான ஆகாயப் பந்தலின் கீழ்
அந்தரத்தில் அரங்கேற்றம் ....எப்போது
நாட்டியம் முடியும் யாரறிவார் !

இயற்கையில் நாம் காணும் இவை
அத்தனையும் ஆனது எவ்வாறு ?
வந்தது எவ்வாறு...வந்தபின்
இயங்குவது எவ்வாறு ? யார் இயக்கிவைத்தார் ?
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் ?

படைத்தவன் ஒருவன் இருக்கின்றான்
அவனே ஆட்டி வைக்கின்றான் என்று நினைப்பது
மூட நம்பிக்கையா ?

இயற்கையின் உயிர் மூச்சில்
சலனங்கள், நாடி உண்டு ....
நாடி இல்லாது மனிதன் இல்லை
நாடி முடிந்தால் பிரளயம்
முடிப்பவன் யார் ? அவனே
என்னையும் உன்னையும் படைத்தது
அலகிலா விளையாட்டு உடையவன்
ஆண்டவன்... பல பெயரில் பலமதங்களில்
விந்தைதரும் வினோதம் இயற்கை !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-Sep-23, 8:43 pm)
பார்வை : 196

மேலே