வாழ்க்கை ஒரு ஓட்டம்

வாழ்க்கை ஒரு ஓட்டம்


வாழ்க்கை ஒரு ஓட்டம்,
வாழத் தவறிவிட்டால்
ஆட்டம்;
வாழப் பழகி விட்டால் பாடம்,
வாழத்தயங்கிவிட்டால் திண்டாட்டம்;
வாழ துவங்கி விட்டால் கொண்டாட்டம்;
வாழும் வரை வாழ்க்கை,
வாழ்க்கை பிசகிவிட்டால் குழப்பம்;
வாழத் தவறி விட்டால் கூச்சல், கூப்பாட்டம் ஆர்ப்பாட்டம்.

நெருடும் வரை நேசம்,
வருடும் வரை சொந்தம்;
நெருங்கியபின் பாசம்;
நெறி தவறிவிட்டால் நாசம் ;
நொறுங்கியபின் மோசம்;
நொந்தால் என்ன லாபம்;

கூடும் வரை கூட்டம்,
கூச்சல் போடும் வரை ஆர்ப்பாட்டம்;

ஓடும் வரை ஓட்டம் ,
ஓய்வில்லாத ஆட்டம்;
ஓடி ஒடுங்கிய பின் வாட்டம்;
ஒடிந்து விழுந்து விட்டால் ஓலம்;

சுடும் வரை நெருப்பு;
சுட்ட பின் சாம்பல்,
தொட்டபின் உறவு,
விட்ட பின் பிரிவு.
விழுந்து விட்டால் பரிவு;
நேசிக்கும் போது நேசம்,
யோசித்தால் நாசம்.

வாழும் வரை வாழ்க்கை
வாழ்க்கை முடிந்தால் யாத்திரை;
வசதிவந்தால் அசதி,
வறுமை வந்தால் வறுத்தம்.

சிதறும் வரை சிரிப்பு,
பதறும் வரை தவிப்பு;
சினம் கொண்டால் வெறுப்பு.

உதறும் வரை உறவு,
கதறும் வரை உருக்கம்;
கண்ணீர் வடிக்கும் வரை கருணை,
கண்ணீர் காய்ந்தால் சோகம்;
கண்களை மூடிவிட்டால் சுபம்.
ஆறுதலுக்கு இரக்கம்,
ஆகாவிட்டால் தயக்கம்;
ஆவியாகி விட்டால் இரங்கள்.
மாறும் வரை மாற்றம்,
மாறுதழுக்கு உறக்கம்;
மாற்றிவிட்டால் ஏக்கம்;
மாறிவிட்டால் ஏமாற்றம்;
மறந்து விட்டால் தடுமாற்றம்;
மறுத்து விட்டால் தயக்கம்.

ஆறிவிட்டால் இறுக்கம்;
மாறிவிட்டால் தயக்கம்;
ஏமாற்றப்பட்டால் கலக்கம்;
காணாத வரை கனவு;
கண்டுவிட்டால் கடவுள்;
கண்கள் குருடானபின் இருட்டு;
கண்ணீரில் கலக்கம்;
கட்டியபின் கிரக்கம்.

சுழலும் வரை பூமி;
கழலும் வரை காற்று;
சுழட்டும் வரை வீச்சி;
சுழட்ச்சி நின்று விட்டால் வீழ்ச்சி;

சுற்றுவது நின்றுவிட்டால் சுடுகாடு;
சுற்றிவர சுற்றம் கூடவராது சாமி;
விடும் வரை உறவு,
தொடும் வரை ஆசை,
பாயும் வரை பகை;
படும் வரை பாடம்,
படுத்தி விட்டால் சோகம்;
கிடத்திவிட்டால் பாடை.

சிரிக்கும் வரை மகிழ்ச்சி;
சிரிக்க மறந்து விட்டால் மனக் கிளர்ச்சி;
சிறக்கும் வரை புகழ்ச்சி
சிறிதும் இறங்கி விட்டால் இகழ்ச்சி;
தொடும் வரை உணர்ச்சி,
தொடரும் வரை தொடர்ச்சி;
தொடாவிட்டால் அதிர்ச்சி;
போகும் வரை சுகம்,
போகிவிட்டால் சோகம்;
போக்கு காட்டுது பாசம்;
போடும் வரை வேசம்.

தேடும் வரை பதட்டம்,
தேடலில் வேண்டாம் பயம்;
தேடவில்லை என்றால் ஏது பலன்;
தேடிவிட்டால் அமைதி;
போராடும் வரை போராளி;
போராட்டமே பேரோளி;
போகத் தயங்குபவன் மனிதன்
போகத் துணிந்தவன் ஞானி

வாழ்க்கை ஒரு வட்டம்
வாழத்தவறிவிட்டால் வாட்டம்;
நடப்பது தான் நடக்கும்
நடந்து விட்டால் வழுக்கும்
நடக்க மறுத்துவிட்டால் முடக்கும்;

ஓடும் வரை ஓட்டம்
ஓடி ஒடுங்கி விட்டால் ஆட்டம்
ஓய்ந்து விட்டால் முடக்கம்
ஓலம் இடும் கூட்டம் ;
நடந்தால் நாடெல்லாம் உறவுக் கூட்டம்,
படுத்தால் பாயும் பகையின் சீற்றம்;
அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (28-Sep-23, 6:28 pm)
பார்வை : 38

மேலே