பொன்னியம்மன்
பொன்னியம்மன் கோயிலின்
தல மரம் அந்த வேப்பமரம்
அதன் கிளையில் மஞ்சள் துணியில்
கட்டிய ஒரு சிறு மாற தொட்டிலை
அந்த பெண் மிக பய பக்தியுடன்
கண்மூடி வேண்டுதல் செய்து கட்டிவிட்டாள்..
அங்கிருந்த நான் அந்த பெண்ணிடம் கேட்டேன்
'தாயே, இப்படி ஒரு மரத்திற்கு தொட்டில்
கட்டி தொழுகிறாயே .....என்ன பலன் ?
அதற்கு அவள்" ஐயா இது வெறும் மரம் இல்லை
அந்த பொன்னியம்மனின் கற்பக விருட்சம்
பக்தியுடன் நல்லதை வேண்ட கிட்டும்;போன வருடம் முன்வருடம் ....................பெறவேண்டி தொட்டில் காட்டினேன்
இதோ இந்த பெண்குழந்தை பொன்னி
பிறந்தாள்....ஆலையொரு பிள்ளை வேண்டி
தொட்டில் கட்டி வேண்டுகிறேன் அவனுக்கு
முருகன் என்று பெயர் வெப்பேன் நான் '
என்றாள்.....முழுநம்பிக்கை முகத்தில் தெரிய..
நம்பினார்க்கு தெய்வம் ....தெள்ளத்தெரிய
வாயடைத்து போனேன் ....இது
மூடநம்பிக்கை இல்லை,,,,நம்பிக்கை
படைத்தவன் மீது நம்பிக்கை..