புறாநான்- குறவன்
உச்சி வெய்யல்
ஆலமர நிழலில் நான்
எங்கிருந்தோ மரத்தின் கிளையில்
தங்க வந்ததோ ஓர் வெண்புறா
புறாவின் அழகு, அதன் கண்கள்
என்னை மயக்கிட கற்பனையில்
ஓர் கவிதை புனைய நான் .....
அய்யகோ ....எங்கிருந்தோ வந்த
அந்த சிறுக்கல் புறாவின்மீது பட்டது
நொடியில் அழகு புறா மண்ணில்
மடிந்து வீழ....
குறவன் இன்முகத்துடன் அதை
கையில் மடித்து பையில் போட்டுக்கொண்டான்
ஏதோ சொல்லிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினான்
என் கண்களுக்கு காணும் விருந்தாய்
வந்தமர்ந்த வெண்புறா
குறவன் கண்ணிற்கு சதையுள்ள மாமிசமாய்
தெரிந்தது.....அவனுக்கு வயிற்றுக்கு விருந்தாய்
சற்றுமுன் புறாவின் அழகை ரசித்த நான்
கலங்கிய நெஞ்சத்தோடு அங்கிருந்து
கிளம்பிப் போனேன் .....
ஒருவன் கண்ணிற்கு அழகானது
மற்றொருவனுக்கு வயிற்றுக்கு உணவானதே !