பூந்தென்றல் காரெழில் கூந்தலில் காதலைக் கற்பித்தும்

நீரலையில் நீந்திடும் மெல்லிய பூந்தென்றல்
காரெழில் கூந்தலில் காதலைக் கற்பித்தும்
நேரேயுன் முன்பிலே நான்வந்தேன் என்னைநீ
ஏரெடுத்து பார்க்கவில்லை ஏன் ?

நீரலையில் நீந்திடும் மெல்லிய பூந்தென்றல்
காரெழில் கூந்தலில்கா தல்கற்றும் --பேரெழிலே
நேரேயுன் முன்பிலே நான்வந்தேன் என்னைநீ
ஏரெடுத்து பார்க்கவில்லை ஏன் ?

எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-23, 8:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே