நிம்மதி
நிம்மதி.
08 /10 /23
வீறிட்டு அலறும் பச்சைக்குழந்தையின் அழுகை
மௌனம் வந்தால் கொஞ்சம் நிம்மதி.
நீட்டிய மதிப்பெண் பட்டியலில் - அப்பா
மௌனமாய் ஒப்பிட்டால் தப்பித்தோம் என்றொரு நிம்மதி.
பொங்கும் காதலில் கண்கள் பேசிடும்
மௌன பாஷை சுவர்க்கம் வசப்பட்ட நிம்மதி.
எதிர்வாதம் செய்யும் மனைவியின்முன் ஏகாந்த
மௌனம் ஏற்படுத்தும் வீட்டில் நிம்மதி.
ஆலோசனை ஏற்காத இளைய சமூகத்தின் முன்
மௌனம் கொள்வது மதியூக நிம்மதி.
வயதானபின் அனுபவம் மதிக்காத வீட்டார்முன்
மௌனம் காப்பது மதிப்பான நிம்மதி.