அலைப்பேசி அடிமை

அலைப்பேசி அடிமை
×××××××××××××××××××××
அங்கிங்கெனாதபடிக் கைப்பேசி
எங்கும் புகுந்தது
நன்மைச் செய்யாது
தீமைகள் புகுத்தும்

கைப்பேசியைக் காண்பதால்
கவணம் கலையும்
வாழ்வின் முன்னேற்ற
துடிப்பை சிதைக்கும்

தானாகவே நகைப்பதை
கைப்பேசி மட்டுமின்றி
உன் செயலைக்கண்டு
ஊரார் நகைப்பர்

உன் காலத்தை
திருடிக் கரைக்கும்
உழைப்பை உறிஞ்சி
வாழ்க்கையைக் கெடுக்கும்

அலைப்பேசிப் பயன்பாட்டில்
அடிமைப் பழக்கத்திற்கு
அடிபணிந்து சுயநினைவுகளை
அடமானம் வைக்கலாமா

அலைப்பேசிக்கு ஓய்வு கொடுத்து
அறவே நிறுத்தாலம்
நிம்மதியான மனதுடன்
நிறைவாக வாழலாம்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Oct-23, 5:45 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 37

மேலே