உழைப்பாளி

உழைப்பாளி
*********************

ஆதவன் உதிக்கும் முன் எழுந்து /
ஆடு மாடுகளுக்குப் பசி தீர்த்து /

மண்வெட்டியைத் தோளில்போட்டு வீதியோடும் தேராக /
மண்ணைக் காக்கவந்த தெய்வம் விவசாயி /

கோடிபணம் உள்ளவனுக்கும் வயிற்றுக்குப் பசீதீர்ப்பவன் /
கோமணம் கட்டிய விவசாயிதான் அன்னபூரணி /

வாடியபயிரைக் கண்டு வாடிய வள்ளலார்போல் /
வாடிய பயிர்களுக்குத் தண்ணீரைப் பாலுட்டி /

வேகாதவெயிலுக்கு பயிரைச் சாகாது காத்திருந்து /
வியர்வைசிந்திக் காற்றாக கழனியெல்லம் வலம்வந்து /

உழைத்து ஓடாய்ப் போனாலும் பசியில்வாடாது /
உலகமக்களைக் காக்கும் தெய்வம் விவசாயி /

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (14-Oct-23, 5:37 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 195

மேலே