மண்ணை நம்பி விதை விதைச்சேன்
மண்ணை நம்பி விதை
&&&&&&&&&&&&&&&&& விதைச்சேன்
&&&&&&&&&&
பருவமழை பொழிந்து குளத்தில் தண்ணீர் /
பாதி நிரம்பிருச்சு உழவன் கவலைபோயிருச்சு /
மயிலைக்காளை ரெண்டு பூட்டி பக்குவமாக /
மண்ணை உழுது மாட்டுச்சாணம் உரமிட்டு /
நாட்டு நெல்ரகம் புழுதிச்சம்பா உன்னை /
நம்பி விதை விதைச்சேன் மண்ணே /
பெளர்ணமி நிலவாக வளரந்து உழவன் /
பசி தீர்க்கும் நெற்கதிர் தாயே /
குலைசாய்ந்த நெற்கதிர்கள் உழவனின் /
குலம் காத்து நிமிர்ந்திட செய்பவளே /
மாடு கட்டி போரடித்தால் மாளாது /
மாறாக யானை கட்டி போரடித்து /
நெல்மணிகளை கண்மணியை பாதுகாத்து தைப்பொங்கல் /
நல்நாளில் பொங்கல் பானையுடன் விவசாயிகளின்/
வாழ்வும் பொங்கிடுமே பொங்கும் கடலாய் /
சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்