காந்தி என்னும் மாமேதை

காந்தி என்னும் மாமேதை
×××××××××××××××××××××××
உழவனைக் கண்டு
உருக்கம் கொண்டு
முழுயுடை துறந்து
முக்கண்ணைத் திறந்தாரே

கத்தியின்றி யுத்தமின்றி
ரத்தமின்றி அன்பால்
புத்தியைத் தீட்டப்
பரங்கியர் வெளியேறினானே

அகிம்சையெனும் அறவழியிலே
அடக்கிய வீரனன்றோ
அகிலமும் வியந்த
அரையுடை மனிதரல்லோ

வாய்மை வழியிலே
வெள்ளையன் சட்டத்தை
அய்யமின்றி எதிர்க்க
அந்நியன் வலிமையற்றானே

இந்தியாவின் இதயம்
இங்கிருக்கும் கிராமம்மென்றாரே
வன்முறை கூடாது
இரக்கத்துடன் கூடிடுயென்றாரே

யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (17-Oct-23, 6:22 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 23

மேலே