அமுதகதிரோன் மடியில் நிலாக்காலம்
அமுதகதிரோன் மடியில் நிலாக்காலம்
××××××××××××××××××××××××××××××××××
அண்ணாந்து கூப்பிட்டோம்
அமுதநிலவே கைக்குள் வரவில்லை
வெண்ணில அகப்பட்டது தாயகத்தின்
விஞ்ஞானிகள் கையிலே
சாதனை சாதனம்
நிலவூர்தி(சந்திராயன்) சந்திரன் மடியிலே
சோதனை செய்தே
சாதகமானப் புதையலை தேடுமே
நிலவில் ஆராய்ச்சி
நிலத்தில் நிலைகொண்ட கலம்
உலவிடும் சக்கரத்தில்
உதயமாகும் தேசத்தின் சின்னமே
விஞ்ஞான வளர்ச்சியில்
வெற்றி கண்ட பாரதம்
தஞ்சமடைந்த திரிசாரணன்(ரோவர்) சந்திரனில்/
தாதுக்களை கண்டறியவே
வளங்களை நிலா பரிசளிக்க
வல்லரசாகும் இந்தியா
களம் காண்போம் வாழ்வதற்கு
கதிரவனில் கால்பதித்தே
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்