மனைவியின் தோழியிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்

மனைவியின் தோழியிடம்
பேசிக் கொண்டிருக்கிறேன்.

அவளிற்கு புருவமுயர்த்திப் பேசும்
என் கண்கள் பிடித்திருக்கிறது

விரலுயர்த்திப் பேசுமென் கண்ணியம்
பிடித்திருக்கிறது.

விழிநிமிர்ந்து பேசுமென் குரலின் மென்மைப் பிடித்திருக்கிறது.

அந்த ஆழிநீரின் மேல் சுவடில்
பெருவிரல்களால்
கோலம் அழஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

என் சிரிப்பின் ஹஸ்கீயில்
காரமெல் கோக்கோவின் சுவை
என்கிறாள்.

காதல் குழைவில்
கலக்க நறுமணம் பெறுகிறது
அமிழ்ந்த என் இதயத்தின் காலநிலை.

நீளாத அலைவரிசையில்
ஒரு கார்காலக் குளிர்மழை.

நேரெதிர் நிரலால்
கனத்த கைப்பிடி இன்னும்
இறுக இறுக

சைக்கிள் சைனில் சிக்குண்ட
புடவை முந்தாணைபோல்
இனம் புரியாத உறவின் உணர்வில்

அவள் கனவுக்கீறி சொல்கிறேன்.

பலரும் என்னை நெருங்கினார்கள். அவர்கள் என்னை நேசித்திருந்தார்கள்.
என் அருகலில் நாகரீகம் இருந்ததனால்.
என் அணுகுமுறைப் பிடித்திருந்ததனால்.

பலரும் என்னை வெறுத்திருந்தார்கள்
இனியொருமுறை இந்த அன்பு
எங்கே கிடைக்கப்போகிறது.?
பிரிய மனமின்றி
இது போன்றதொரு நட்பு
இனி யாரிடம் யாசிக்கப் பெறுவது. ?

என் மனைவியின் தோழியிடம்
பேசிக் கொண்டிருக்கிறேன்.

என் பேச்சுக்களும்
அவள் சமூகத்தின் முன்னால்
வழிநடத்திச் செல்லும்
என் நடத்தைகளும் தானே
என் மனைவிக்கு
அவள் தோழியிடம்
மரியாதைப் பெற்றுதருகிறது.
இல்லையா ?

மனைவியின் தோழியிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.

பூக்காரன் கவிதைகள் - பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (26-Oct-23, 12:00 am)
பார்வை : 49

மேலே