பெரியோரைப் பேணி ஆண்டால் -- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பெரியோரைப் பேணி ஆண்டால்
*********
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
வாய்ப்பாடு :- விளம் அல்லது மாங்காய் /மா / தேமா / அரை அடிக்கு
ஒரே அடி எதுகை / 1மற்றும் 4ல் மோனை
பெரியோரைப் பேணி ஆண்டால்
----பெருமைகள் ஓங்கி நிற்கும் ;
உரியநற் பணிகள் ஆற்ற ,
----உயரத்தில் உனையே வைத்து,
அரவணை துயிலும் அம்மால்
----அரியணை அளித்துக் காக்க ;
நரிதனைப் பரியாய் ஆண்ட
----நாதனும் பரிந்து ஏற்பான் !