குவிந்தயிதழ் முத்துக் குவியல் சிரிப்பு

குவிந்தயிதழ் முத்துக் குவியல் சிரிப்பு
தெவிட்டா நறுந்தேன் தவழும் சிவப்பில்
கவிந்தயிமை அந்தி கவியும் அழகு
கவிதை தரவோ நவில்

கவிக்குறிப்பு :

மூன்றாம் சீரில் எதுகை பொலிய எழுதிய கவிதை
ஈற்றடி தவிர்த்து மோனையும் அமைய எழுதப்பட்டிருக்கிறது
யாப்பார்வலர்கள் ரசித்து மகிழலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Oct-23, 9:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 27

மேலே