விழியால் காதலைச் சொல்வாள்
குயிலே குயிலேநீ கூவு வசந்தம்
கயலாடி டும்விழியால் காதலைச் சொல்வாள்
இயலோடு மெல்லிய இன்னிசை பாடி
குயிலேநீ யும்சேர்ந்து பாடு
குயிலே குயிலேநீ கூவு வசந்தம்
கயலாடி டும்விழியால் காதலைச் சொல்வாள்
இயலோடு மெல்லிய இன்னிசை பாடி
குயிலே இயைந்துநீயும் கூவு