விடியல் விரையும் எனும் குடியரசே -- கட்டளைக் கலித்துறை

விடியல் விரையும் எனும் குடியரசே -- கட்டளைக் கலித்துறை
**************
வாய்ப்பாடு :- புளிமா / புளிமா / தேமா / புளிமா / கருவிளங்காய்
அடிக்கு 5சீர்கள் / அடி தோறும் ஒரே எதுகை/
முதல் இரண்டு அடியில் 5ம் சீர்களிலும் அடுத்த இரண்டு அடிகளில்
4ம் சீர்களிலும் பொழிப்பு மோனை
அடிகள் நேரசையில் தொடங்கவே அடிக்கு 16எழுத்துக்கள் .

நடித்துக் கெடுத்துத் தொல்லை அளித்து நரகமாக்கி ;
மடியில் இருந்த காசைப் பிடுங்கி மகிழ்வுறுமாம் ;
குடியைப் பழக்கி நாட்டின் குடியைக் கெடுத்திடுமாம் ;
விடியல் விரையும் என்று விளம்பும் குடியரசே !
*********

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Nov-23, 8:59 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 45

மேலே