காதலி தெய்வீக மங்கை கோவில் வருகிறாள் இளம்பொழுதில்

மொட்டவிழ் பூவினம் மலரும் காலையிலே
பொட்டினை வைத்தவள் புலரும் இளம்பொழுதில்
மட்டிலா புன்னகை மங்கை வருகிறாள்பார்
தட்டினில் பூக்களைத் தாங்கி கோவிலுக்கு
----கீழே கன்னியப்பனார் விழைவுப் பரிந்துரைப்படி
விளம் விளம் மா காய் எனும் ஒரே வாய்ப்பாடும்
மூன்றாம் சீரில் மோனையும் அம்மாச் சீரில் குறில் ஒற்றும்
குறிலும் அமைக்கப்பட்ட கலிவிருத்தப் பாவினம்
காதல் கடவுள் இரண்டையும் பற்றி ,,,,
==============================================================
இறத்தலும் பிறத்தலும் இயற்கை!
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும்; நெடில், நெடில் ஒற்று வராது)
துறத்தலும் நல்லறத் துறையும் அல்லது
புறத்தொரு துணையிலை பொருந்தும் மன்னுயிர்க்(கு)
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட,நீ? 71
- திருவடி சூட்டு படலம், அயோத்தியா காண்டம், கம்பராமாயணம்
அருமையான, இனிமையான, எளிமையான கலிவிருத்தம்! இந்த வாய்பாடை ஒற்றி காதலைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ ஓரிரு பாடல் எழுதுங்களேன்.