இறத்தலும் பிறத்தலும் இயற்கை - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும்; நெடில், நெடில் ஒற்று வராது)

துறத்தலும் நல்லறத் துறையும் அல்லது
புறத்தொரு துணையிலை பொருந்தும் மன்னுயிர்க்(கு)
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட,நீ? 71

- திருவடி சூட்டு படலம், அயோத்தியா காண்டம், கம்பராமாயணம்

அருமையான, இனிமையான, எளிமையான கலிவிருத்தம்! இந்த வாய்பாடை ஒற்றி காதலைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ ஓரிரு பாடல் எழுதுங்களேன்.

எழுதியவர் : கம்பர் (20-Nov-23, 9:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே