கலிவிருத்தம் -- அருமையைப் போற்றிய அன்புச் செம்மலே
கலிவிருத்தம் -- அருமையைப் போற்றிய அன்புச் செம்மலே
******************""
அரசனின் பார்வையில் ஆக்கம் பெற்றவன் ;
அரனிடம் வாதிடும் ஆர்வச் சுந்தரன் ;
அரவணி சூடிய அப்பன் ; மாமலை
அருமையைப் போற்றிய அன்புச் செம்மலே!
************
( விளம் விளம் மா கூவிளம்) ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில்
மோனை. ஒவ்வொரு அடியிலும் மெய்யெழுத்து நீக்கி
12எழுத்துக்கள்.
விளக்கம் : சுந்தரன் -- சுந்தரமூர்த்தி நாயனார். அரச குடும்பத்தால்
வளர்ந்தவன். திருமணச் சபையில்
இறையோடு வாதிட்டவன்