பிரியாத இரத்த பாசம்

இரத்த பாசம்; இதில் என்ன வேசம் .
இதயத்தில் வடியிது நேசம்,
இன்னும் என்ன தோசம்;
பணம் பார்த்து வாராதது பாசம்,
பாசத்தில் என்ன வேசம் ;
பகையில் ரணமாகுது மனசும்.

இரத்த பந்தத்தால் வந்த பாசம்;
இரக்கம் காணதோ இந்த பாசம்;
அரக்கத்தனத்தில் ஏன் இந்த பாசம்;
பிறப்பால் வந்த பாசம்;
பிடிவாதம் பிடித்தால் பிழையாகிடும் பாசம்;
பிடித்தே வந்த பாசம், நடிக்கத்தெரியாத பாசம்;
இரக்கம் இல்லாமல் பேசினால் பிரிவு;

இறவா இரத்த பாசம் இது;
இறக்கிவைக்க முடியாது
விற்க முடியாத பாசம்;
விரட்டினாலும்விட்டுப் போகாத பாசம்;
பிடிவாதம் பிடிக்கும் பாசம் பெரிதாய் பங்கம் வ ளைவிக்காது;
மிரட்ட முடியாத விரட்ட முடியாத பாசமிது
மீண்டும் மீண்டும் வந்தே தொத்தும் பாசமிது.

விலை பேச முடியாத பாசம்;
விறகினால் எரிக்க முடியாத பாசம்;
பரிவான பாசம்; பணிவே இதன் நேசம்;
பாய்ந்தே வரும் பாசம்;
பயம் அறியாத பாசம்.

பிரிக்க முடியாத பாசம்;
பிடிவாதத்தில் இல்லை வேஷம்;
புரிந்தால்போதும்;
போதும் போம் என்று சொல்லாத பாசம்
பொங்கி வரும் அன்பு பாசம்.
`

இதயத்தைக் கீறினால் வழிந்து ஓடும் பாசம்;
இறக்கிவிட முடியாத பாசம்;
இரக்கமே அதன் வேசம்;
ஆண்டவன் தந்த அன்பின் பாசம்;
நடிக்கத் தெரியாத பாசம்;
நகமும் சதையுனாம பாசம்;
நாளும் உடன் வரும் பாசம்;
உயிர் பெற்ற கருப்பையும் ஒன்று;
தமக்கையோ, தம்பியோ, அண்ணனோ, தங்கையோ;
தங்கி வந்த கருவறை ஒன்று;
தாங்கிய கரங்களும் ஒன்று;
தாய்தந்த பாலும் ஒன்று;
தாலாட்டிய மடியும் ஒன்று;
சினந்தது ஏன் ! சீற்றமும் ஏன்!
ஒட்டு மொத்தமாய் வெறுப்பதேன் இன்று;
பாசத்தில் சிறிது வலி இருந்தால் வதைத்துத்தான் விடுமோ;
வழுவாக இருந்த பாசம் இன்று வழுக்கி விடத்தான் செய்யுமோ;


மரபு அணுக்கள் ஒன்றாகியும் மறந்தது ஏன்;
காலம் விளையாடியதோ!
காசுபணம் தான் கண்ணை மூடியதோ!
ஒரு மரத்துப் பூக்கள் நாம்,
ஒன்றாய் உண்ட உறவு உதறிப் போனது ஏன்?
சிதறியது மனசு; பதறுது உடம்பு;
காயாது கனிந்த பாசம் இன்று காய்ந்தது ஏன்?
தேயாத பாசம் இன்று தேட தேட மறந்தது ஏன்?
ஓயாத பாசம் இன்று ஒடுங்கியது ஏன்?
குறையாத பாசம் இன்று குறை காண்பதும் ஏன்?

இரத்த பாசம்!
ஒரு கண்வடித்த கண்ணீரை மறுகண்ணும் தாங்குவதேன்!
அடித்து விளையாடிய சிறுபிராயம்,
அள்ளி பிடுங்கித் தின்ற பிராயம் அன்று;
அடித்துக் கொண்டு பிரிந்துபோக துடிக்கும் பிராயம் இன்று,

இரத்த பாசம்!
சிறு துரும்பு பட்டாலும், சீறிவந்தாய் அன்று,
செத்தே இன்று விழுந்தாலும் சினந்து போகின்றது;
சொத்தே பெரிதென்று நினைக்
சோடை போனது
சோடை போன பாசம் இன்று;
பணத்துக்குப் பின்னால் பதுங்குது இரத்தபாசம்;
பகல் வேசம் போடுகிறது இன்று;
அன்பில் ஆதாயம் தேடுது இந்த பாசம்;
அவமானத்திற்கும், அவலத்திற்கும் விலைபோகுது;
ஆணவம் பிடித்தே திரியிது .


இரத்த பாசம்! ஒரே வீட்டில்,ஒரே படுக்கை,
ஒரே போர்வை,ஒன்றாய் மலர்ந்த பாசம் ,
ஒரே ஓட்டம், ஒரே ஆட்டம்,
ஒட்டு மொத்தமாய் ஓடிப்போகுது,
ஓலம் இடத்துவங்குது,

உறவும் பாழாகிப்போனது;
உணர்வுகளும் மாறிப்போனது;
பாசமாய் பேசிய வாயிது;
பசப்பிதான் பார்க்குது .
நாசமாய் போக என்றே சபிக்குது;
விடம் தோய்ந்த சொற்கள் மோதுது;
வேண்டாத செயல்களை செய்யிது;
விரக்தியானாலும்,
விட்டு போகாத இரத்தபாசம் இது;
விழுந்தால் அத்து ஓடும் உடல் இது,
விதண்டாவாதம் எதற்கு;
பாசத்தில் என்ன பசப்பிது.
பழிதீர்க்க துடித்தாலும்;
பதரித்துடிக்கும்; பிரியாத பிரிக்கமுடியாத
இரத்த பாசமிது;
பிடிவாதம் தான் பிடிக்கிது.


அ.முத்துவேழப்பன்;

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (23-Nov-23, 8:32 am)
பார்வை : 38

மேலே