பர்தேசி

ஏண்டா தம்பி உன் பையனுக்கு பேரு வச்சிட்டயா? இந்திப் பேருதானே!
@@@@@
ஆமாம் அண்ணே. உலகத் தமிழர்கள் எல்லாம் இந்திப் பேரைதானெ அவுங்க குழந்தகளுக்கு வைக்கிறாங்க? அந்தப் பாரம்பரியப்படி எம் பையனுக்கு 'பர்தேசி'னு பேரு வச்சிருக்கிறேன்.
@@@@@@@@
ஏண்டா பரதேசி நாயே பெத்த பிள்ளைக்கு 'பரதேசி'ன்னா பேரு வைக்கிறது. இந்தப் பேரைக் கேட்டா உன்னை சனங்க காரித் துப்புவாங்கடா
@@@@@@@
அண்ணா இது நம்ம தமிழ் பரதேசி இல்லை. இந்திப் பர்தேசி. பர்தேசின்னா வெளிநாட்டுக்காரர்னு அர்த்தம்.
@@@@@@@@

இந்தப் பெரை யார் பரதேசினு சொன்னாலும் பர்தேசினு சொன்னாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பரதேசி தாண்டா.
இந்தப் பேரை ஊரே கிண்டல் பண்ணிச் சிரிக்கும்டா.
@@@@@
இந்தப் பேரை உனக்குச் சொன்னது யாருடா?
@@@@@@@
நேத்துப் பையன் பொறந்தான். மருத்துமனையிலிருந்து வீட்டுக்கு வந்த போது தொலைக்காட்சில் ஒரு பழைய இந்திப் படம் ஓடிட்டு இருந்த்து. அதில ஒருத்தர் சோகமா ஒரு பாட்டுப் பாடுவாரு, அந்தப் பாட்டுல திரும்பத் திரும்ப 'பர்தேசி, பர்தேசி'னு பத்துத் தடவையாவது பாடியிருப்பார். புதுமையான இந்திப் பேரா இருக்குதேனு தான் அந்தப் பேரை எம் பையனுக்கு வச்சேன்.
@@@@@@
உங்க குடும்பம் ஊருக்குள்ள பரதேசிக் குடும்பம்னு பேரு வாங்கறதுக்குள்ள உம் பையனுக்கு நல்ல அழகான தமிழ்ப் பேரா வச்சிடுடா தம்பி,
@@@@@@
சரி அண்ணே, நீங்க சொல்லறபடியே செய்யறேன்,

எழுதியவர் : மலர் (24-Nov-23, 1:34 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 30

மேலே