நந்திதன்னைப் மிகப்போற்றும் நன்னாள்தான் பிரதோசம்

நந்தியைப் போற்றிடும் நன்னாள் பிரதோசம்
நந்திக் களபவிழா நற்சிவ சைலத்தில்
நந்தி விலகிநிற்க நந்தன் தரிசனமாம்
நந்திபோற்றி கேடுதடை நீக்கு

----இன்னிசை வெண்பா

நந்திதன்னைப் போற்றிடும் நன்னாள்தான் பிரதோசம்
நந்திக்குக் களபவிழா நற்சிவசை லம்தன்னில்
நந்தியனார் விலகிநிற்க நந்தனாரின் தரிசனமாம்
நந்திபோற்றி கேடுதடை நீக்கிநீநல் வாழ்வினைவாழ்

----கலிவிருத்தம் முற்றிலும் காய் எதுகை மோனை

நந்திதன்னைப் மிகப்போற்றும் நன்னாள்தான் பிரதோசம்
நந்திக்குக் களபவிழா நற்சிவசை லம்தன்னில்
நந்தியனார் விலகிநிற்க நந்தனாரின் தரிசனமாம்
நந்திபோற்றி தடைகேடு விலகநல் வாழ்வினைவாழ்

----தரவு கொச்சகக் கலிப்பா
காய் முன் நிரை கலித்தளை மிகுந்து வந்ததால்
பா பாவினமாகி பாவானது சீர் தளை செய்மாயம்

தெய்வீகத் திருக்குறிப்புகள் :--
=========================
---ஆழ்வார் குறிச்சிக்கு அருகில் சிவசைலத் தலத்தில்
நந்திக் களப விழா பிரசித்தி
--நந்தனார் தரிசித்திட தடையாய் இடைநின்ற விடை
நந்தி இறைவன் ஆணையால் விலகி நின்ற தலம்
திருப்புன்கூர்

----இன்று பிரதோஷம்
மூன்று நந்தி வெண்பா விருத்தம் த கொ கலிப்பா
படிப்போர்க்கும் புண்ணியமே

எழுதியவர் : கவின் சாரலன் (24-Nov-23, 1:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 12

மேலே