மாதுளை முத்ததன் மயக்குந் தீஞ்சுவை - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
மாதுளை முத்ததன் மயக்குந் தீஞ்சுவை
காதலைக் கண்களிற் காட்டி யின்புறும்;
நீதிசெய் நெஞ்சென நிற்கும் வான்மழை
காதலின் தூய்மையாங் கவிதை ஆனதோ!
- வ.க.கன்னியப்பன்