பார் போற்றும் தமிழ்ப் பண்பாடு
மொழிக்கும் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தான்
அன்பின் ஐந்திணை உலகுக்கு உரைத்தான்
பண்பாடு கலாச்சாரம் நாகரீகத்தில் சிகரம் தொட்டான்
இல்லார்க்கு அள்ளித்தரும் அறத்தை வளர்த்தான்
உழைப்பிற்கு அஞ்சாத உன்னத குணம் கொண்டான்
விருந்தோம்பலுக்கு முன்னோடியாய் வாழ்ந்து காட்டினான்
வீரத்தையும் மற்ற உயிர்மேல் ஈரத்தையும் போற்றி வளர்த்தான்
புறத்திணை போர் யுக்திகளால் உலகை ஆண்டான்
பெண்களை மதிக்கும் பண்பினை வளர்த்தான்
நட்பிற்கும் கற்புண்டு எனும் நட்பிலக்கணம் பாராட்டினான்
தாய்மையே மூலம் என்பதை உலகிக்கிற்கு உணர்த்தினான்
வாய்மையே வெல்லும் எனும் நீதியை புகட்டினான்
மருத்துவத்திலும் அறிவியலிலும் தன்னிறைவு கண்டான்
வணிகத்தின் யுக்திகளை அறிந்து கடல்கடந்து வாணிபம் செய்தான்
மானம் காக்கும் ஆடை நெய்வதில் அதிசயம் படைத்தான்
தமிழ்ப் பண்பாட்டின் வேர்களின் காட்சி கீழடியே சாட்சி என நிருபித்தான்
அரசனும் ஆண்டியும் நிகர் எனும் சமத்துவம் போதித்தான்
ஆன்மிகம் மனிதனின் ஏழாம் அறிவு எனும் நம்பிக்கையை விதைத்தான்
ஆயக்கலைகளையும் ஐயமின்றி கற்றொழிகினான்
கல்லை சிலையாக்கி சிலைக்கு உயிர்கொடுத்து படைப்பியல் பிரம்மனானான்
ஐம்பெரும் காப்பியங்கள் படைத்து அகில இலக்கியத்தில் ஆட்சிப்பிடித்தான்
தொல்காப்பியர் அவ்வை கபிலர் திருவள்ளுவர் கம்பர் வள்ளலார் வழியில் நடந்து வையத் தலைமை கொண்டான்
தமிழனின் மூவாயிர வருட பாரம்பரியத்தை சொல்லி சொல்லி தீராது எழுதி எழுதி மாளாது
வாழ்க தமிழ் வளர்க தமிழன்.
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்.