பாசாங்குப் பவித்திரர்கள் -- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாசாங்குப் பவித்திரர்கள் -- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
**********************
விளம் அல்லது மாங்காய் /மா /தேமா / அரையடிக்கு

கதவினைத் தட்டு, உங்கள்
----காப்பகம் என்று சொல்லி ;
உதவிகள் கோரும் மக்கள் ;
----உணர்வினை மதியா திங்கு ;
இதமாகப் பேசித் தீர்க்க
----இயலாத நிலையி லுள்ள ;
பதவியைப் பற்றி நிற்கும் ;
----பாசாங்குப் பவித்தி ரர்கள் !

(ஒன்று மற்றும் நான்காம் சீரில் மோனை)

எழுதியவர் : சக்கரைவாசன் (25-Nov-23, 6:35 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 31

மேலே