நல்ல மாந்தரின் இறைவன்
இறைவன் கண்ணிற்கு புலனாகும் போது
புறக்கண் ஏனோ காண தவறிட
'அவன்' கண்ணிற்கு தெரியாமல் இருக்க
இல்லை அவன் என்கின்றார் மாந்தர்
கொஞ்சம் 'மகாபாரதம்' ஏட்டைப் புரட்டுங்கள்
நான் சொல்வது புரியும் ஆம்
அதில் இறைவன் கிருட்டிணனாய் மண்ணில்
வந்து அவதரிக்க 'அவனை' தம்மைப்போல்
ஒருமனிதன் இவன் என்றே இறுமாப்பில்
இருந்தனர் மாந்தர் கீதையில் இதைக்
கண்ணனே கூறுகின்றான் நல்ல மாந்தரில்
இறைவனைக் காண் சித்தர்கள் அவரே