வென்று முடித்திடு……

வென்று முடித்திடு……
26 / 11 / 2023

வெறும் கையால் முழம் போடாதே - தம்பி இங்கு
வெறும் வாயை மென்று துப்பாதே
பெரும் மாற்றம் நிகழ வேண்டுமே - தம்பி நீயும்
சிறுமைப்பட்டு சிறையில் சிக்காதே

தடைகள் யாவும் தகர்த்து நீயும் - தம்பி
மடை திறந்த வெள்ளமென பாய்ந்திடு
படைகள் எல்லாம் திரட்டி நீயும் - தம்பி
விடைகள் தேடி நிற்காமல் ஓடிடு

வானளவு ஆசை வைத்திடு - தம்பி
பூமிபோல பொறுமை காத்திடு.
உனக்கான நேரம் கனிந்திடும் - தம்பி
உன்னை மட்டும் நம்பி இருந்திடு

வெற்றிப் பசியை தூண்டிவிட்டு - தம்பி
விவேகத் தீயை அணையாமல் காத்திடு
துணிவாய் நீயும் எட்டி நடந்திடு - தம்பி
பணிவாய் நீயும் வென்று முடித்திடு.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (26-Nov-23, 11:30 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 71

மேலே