புன்னகையில் வந்தவுந்தான் பூங்கூந்தல் பரிசினிலே

தென்றலுக்குத் தேவையொரு தோட்டம் சிலமலர்கள்
புன்னகையில் வந்தவுன் கூந்தல் பரிசினில்
நன்றி நவின்றது நீள்குழலை நீவியது
தென்றல் வருடமகிழ்ந் தாய்
-----இன்னிசை வெண்பா
தென்றலுக்குத் தேவையொரு பூந்தோட்டம் சிலமலர்கள்
புன்னகையில் வந்தவுந்தான் பூங்கூந்தல் பரிசினிலே
நன்றியினை நவின்றதுபின் மென்குழலை நீவியது
தென்றலினின் மென்வருடல் தன்னிலேநீ யும்மகிழ்ந்தாய்

-----கூவிளங்காய் காய் காய் காய் கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-23, 4:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே