மனிதன் எங்கே

மனிதன் எங்கே? மனிதன் எங்கே? மனிதன் எங்கே?
@@@@@@@
எந்த மனிதன்? நீயும் மனிதன், நானும் மனிதன், எங்க அப்பாவும் மனிதன், நாம எல்லோரும் மனிதர்கள் தான். யாரைத் தம்பி தேடற?
@@@@@@
மனிதனைத் தான் தேடறேன்.
@@@@@@@
உனக்கு மூளை குழம்பிப் போச்சா?
@@@@@@
நான் தெளிவாத் தான் இருக்கிறேன். நான் மனிதனைப் பார்க்க வேண்டும்.
@@@@@
பாரு. நல்லாப் பாரு. இங்கே மூன்று மனிதர்கள் எங்கள் வீட்டில். நான், என்னோட அப்பா, தாத்தா, என் மகன், பேரன் - எங்களைப் பார்த்தா மனிதர்கள் மாதிரி தெரியலையா தம்பி?
@@@@@@@
நீங்க எல்லாம் மனிதர்கள் தான். என் நண்பன் மனிதன் எங்கே?
@@@@@@@
உன் நண்பன் கண்டிப்பா மனிதனாத் தான் இருக்க முடியும். அவனுக்குப் பேரு கிடையாதா?
@@@@@@@
அவன் பேரே மனிதன். அந்த மனிதன், என் நண்பன் எங்கேனு தான் கேட்கிறேன்.
@@@@@@@
என்னடா தம்பி உளறுகிறாய்.
@@@@@@
என் நண்பன் மனிதன் உங்க வீட்டில தான் இருக்கிறான், அவன் எங்கே?
@@@@@@@
யாரு, என் பேரனா?
@@@@@@
ஆமாம். அவன் தான் மனிதன்.
@@@@@@@
நாங்கள் எல்லாம்?
@@@@@
நானும் நீங்களும் பல தடவை சொன்னதை திரும்பச் சொன்னா நல்ல இருக்கதுங்க ஐயா. உங்க பேரன் பேரு என்ன?
@@@@@@@
ஏண்டா அவனோட பேருகூட எங்களுக்கு மறந்து போகுமா?
@@@@@@@
அவன் தான் மனிதன். என் அருமை நண்பன் மனிதன்.
@@@@@@@
தம்பி நீ கீழ்பாக்கதில குடியிருக்கிறாய். அதற்காக அங்குள்ள மனநல மருத்துவமனையிலிருந்து தப்பி வந்தவன் போல பேசாதே.
@@@@@@
என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா. உங்க பேரன் பேரு 'மனிதன்', இதுகூடத் தெரியாம இருக்கறீங்க?
@@@@@@@
என்னடா தம்பி சொல்லற?
@@@@@@
உங்க பேரன் பேரை ஒருமுறை சொல்லுங்கள் ஐயா.
@@@@@@@
மானவ்
@@@@@@
அந்தப் பேருக்கு அர்த்தம் தெரியுமா?
@@@@@@
தமிழர்கள் எல்லாம் அவுங்க பிள்ளைகளுக்கு இந்தி அல்லது சமஸ்கிருதப் பேருங்களைத் தான் வைக்கிறாங்க. யாரு பேருக்கெல்லாம் அர்த்தம் பார்த்துப் பேரு வைக்கிறாங்க. என் பொண்ணு பிரபல மருத்துவக் கல்லூரில படிச்சா. அங்கே நிறைய வடமாநில மாணவர்கள் படிக்கிறாங்களாம். அவுங்கள்ல ஒரு பையன் பேரு 'மானவ் கோக்ரி'யாம். அவள் தான் என் பேரனுக்கு 'மானவ்'னு பேரு வச்சா.
@@@@@@@@@@@
'மனிதன்'னு பேரு வச்சாக் கேவலம். 'மானவ்'னு பேரு வச்சா கவுரவம். பெருமையா நினைக்கிறீங்க. நீங்க எல்லாம் தமிழர்கள் தான். ஆஙகிலம் தெரிந்தாலும் தாய்மொழி தமிழ். தமிழில் தான் பேசறிங்க. எழதுறீங்க. ஆனா பிள்ளகளுக்குத் தமிழ்ப் பேரை வைக்க மாட்டீங்க. இந்தி பேசும் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள். நூற்றுக்குத் தொண்ணூறு சதம் தமிழர்கள் இதைப் பற்றி சிந்திப்பதே இல்லை. நமக்கு தன்மானம் இல்லை.
@@@@@@@@

தம்பி தமிழரசா, நீ எட்டாம் வகுப்பு படிக்கிற பையனா இருந்தாலும்
தமிழுணர்வு உள்ள பையனா இருக்கிற. உன்னைப் பார்த்து நாங்க திருந்தி என் பேரனுக்கு அழகான தமிழ்ப் பேரா வச்சிடறோம் தம்பி. வாழ்க தமிழ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



@@@@@@


Manav = Man

எழுதியவர் : மலர் (30-Nov-23, 8:42 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : manithan engae
பார்வை : 78

சிறந்த கவிதைகள்

மேலே