திருடி

கொஞ்சிப் பேசினாள் நெஞ்சைக் கிள்ளினாள்
வஞ்சியவள் என்னை மஞ்சத்தில் வீழ்த்தியே
கொஞ்சம் இன்பமும் தந்தாள் மயங்கவைத்தாள்
கண்திறந்து பார்க்கையிலே கன்னி அங்கில்லை
என்னைத் திருடியவள் என்பொருளும் திருடி
எங்கோ மாயமாய் மறைந்தாள் என்னைநான்
இப்போது உணர்ந்து கொண்டேனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (1-Dec-23, 9:31 am)
Tanglish : thirudi
பார்வை : 40

மேலே