கவிதை எனுமெழில் காவிரி பொங்குமே நெஞ்சினிலே

கவிதை எனுமெழில் காவிரி பொங்குமே நெஞ்சினிலே
கவினெழில் பூங்கயல் கண்ணால்நீ காதலில் பார்க்கையிலே
சுவைத்தேன் எழுத்தெனும் சொர்க்கம் மகிழ்ச்சியில் துள்ளிடுமே
கவிஞர்கள் தந்திடும் காதல் கவிதை பெருக்கினிலே

-----கட்டளைக் கலித்துறை

எழுதியவர் : கவின் சாரலன் (1-Dec-23, 9:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே