மேகத்திற்கு தண்ணீர் தர மனமில்லையோ

மேகத்திற்கு தண்ணீர் தர மனமில்லையோ?

எதிரே காய்ந்து
நிற்கும்
மலை சிகரங்கள்

ஏக்கமாய் எதிர்பார்த்து
நிற்கிறது
மலைமுகட்டின்
சரிவில் காய்ந்து
போயிருந்த
செடி கொடிகள்

உரசி விட்டால்
உணர்ச்சி வேகத்தில்

சிந்தி விடுவோம்
மழையை

எண்ணியபடி
விலகி செல்லும்
மேக கூட்டம்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Dec-23, 2:16 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 71

மேலே