குற்றால வெண்பா

ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிவெண் முத்தாரம்
ஆர்ச்சினைத் தாண்டும் அழகினைப் பாரடி
ஊர்திரண்டு வந்தது உல்லாச நீராட
யார்நெருங்கு வார்சொல்தா யே

ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிவெண் முத்தாரம்
ஆர்ச்சினைத் தாண்டும் அழகினைப்பார் -- கூர்விழி
ஊர்திரண்டு வந்தது உல்லாச நீராட
யார்நெருங்கு வார்சொல்தா யே

ஆர்ச்சினை தாண்டும் ----ஆங்கிலம்
மாற்று
ஆர்த்தெழுந்து கொட்டும் என்றும் படிக்கலாம்

குழல்வாய் மொழியாள் குறும்பலா ஈசன்
அழகிலமர் குற்றாலம் காண்

கவின்குற்றா லம்கண் கொளாஎழில் காட்சி
கவிநெஞ்சம் பெற்ற பரிசு

----முறையே இன்னிசை நேரிசை குறள் வெண்பாக்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Dec-23, 8:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே