இவர்களின் சச்சரவில்
இவர்களின் சச்சரவில்..!
காற்றுக்கு
எப்பொழுதும் மரங்களுடன்
சண்டையிட
ஆசை
மோதி சாய்க்க
முயன்றாலும்
வாகாய் வளைந்து
தரும் மர கிளைகள்
இருவருக்கும்
நடக்கும் சச்சரவுக்கு
பலி ஆவது
என்னவோ
பழுத்த இலைகளும்
நலிந்த பூக்களும்