மலர்விழி என்று உன்னை அழைத்தால்

மலர்விழி என்று உன்னை அழைத்தால்
--------முல்லையா ரோஜாவா யாரென்று என்னைக் கேட்குது
புலர்காலைப் பொழுதென்று உன்னை அழைத்தால்
-------மாலை என்னிடம் முகம் சுளிக்குது
சிலைமேனி என்று உன்னைச் சொன்னால்
------கருங்கல்லும் வெண்பளிங்கும் போர்க்கொடி தூக்குது
கலைந்தாடும் கூந்தல் கங்கையோ காவிரியோ நான் சொல்லமாட்டேன்
-------எல்லாவற்றையும் உன் தேர்வுக்கே விட்டுவிட்டேன்

------இயல்பு வரிகள்

மலர்விழி முல்லையா ரோஜாவா சொல்லிடு -- நீயே
புலர்காலை யாமாலை யாநீயார் சொல்வாய் --நீயே
சிலைமேனி பளிங்கா கல்லா சொல்வாய் --நீயே
கலைந்தாடும் குழல்கங்கை காவிரி எதுசொல் -- நீயே

------வெளிவிருத்தம்

மலர்விழி முல்லையா ரோஜாவா சொல்வாய்
புலர்காலை யாமாலை யாநீயார் சொல்வாய்
சிலைமேனி கல்லா பளிங்காநீ சொல்வாய்
கலையும் குழல்நீயே சொல்

-----இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (2-Dec-23, 3:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே