நீல நதிக்கரை யோரம்நீ நின்றிருந்தாய் அந்திநேரம் கண்ணதாசன் வரியழகில்

நீல நதிக்கரை யோரம்நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
மாலை நிலாவும் மஞ்சள் ஒளிதூவ வந்ததங்கே
நீல விழியினால் நெஞ்சிலேநீ காதலத் சிந்துகிறாய்
பாலைப் பொழியும் பால்நிலவும் சிந்துதே வெண்ணமுதை

--------கலித்துறை

நீல நதியினில் நின்றாய் கரையோரம் அந்திநேரம்
மாலை நிலவுமே மஞ்சள் ஒளிதூவ வந்ததங்கே
நீல விழியினால் நெஞ்சிலே காதலச் சிந்துகிறாய்
பாலைப் பொழிந்திடும் பால்நிலா தேளொளி யைச்சிந்துதே
-------- கட்டளைக் கலித்துறை

----- நீல நதிக்கரை யோரம்நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
கண்ணதாசனின் திரைப்பாடல் வரி தூண்டலால் எழுதிய இரு துறை கவிதைகள்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Dec-23, 10:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 87

மேலே