போச்சு....போச்சு....
😢😢😢😢😢😢😢😢😢😢😢
*போச்சு...போச்சு*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
😢😢😢😢😢😢😢😢😢😢😢
"கேட்டு கேட்டு
காது புளிச்சு போச்சு"
ஊழல் இல்லாத
ஆட்சி அமைப்போம்.....!!
"எழுதி எழுதி
கை ஓஞ்சு போச்சு"
மந்திரிக்கு மனு.....!!
"பார்த்து பார்த்து
கண்ணு பூத்து போச்சு"
போன மின்சாரத்தை
எதிர்பார்த்து......!!
"நடந்த நடந்து
கால் தேஞ்சு போச்சு"
அரசாங்க
அலுவலகத்திற்கு......!!
"பேசி பேசி
சலிச்சு போச்சு"
அரசியல்வாதிகளின்
ஊழல்களை....!!
"கொடுத்து கொடுத்து
கை சிவந்து போச்சு"
லஞ்சம்......!!
"காத்திருந்து காத்திருந்து
பாலாய் போச்சு"
ஏழை வாழ்க்கை.....!!
"கஷ்டப்பட்டு
கஷ்டப்பட்டு
வாங்கிய சுதந்திரம்
வீணா போச்சு"
வீரம் இல்லாத மக்களால்....
*கவிதை ரசிகன் குமரேசன்*
😢😢😢😢😢😢😢😢😢😢😢