இவர்

இவர்???

ஊருக்கு உபதேசம்
ஓய்வில்லாமல் செய்வார் -இவர்
பசுத்தோல் போர்த்திய புலியாய்
பாரெங்கும் திரிவார்

சாதிகள் இல்லையென்று மேடையிலே முழங்குவார் -இவர்
பாடையில் போகும்வரை சதியால்
சமத்துவத்தை உடைப்பார்

உழைப்பால் உயரவேண்டுமென
சளைக்காமல் பேசுவார் -இவர்
அடுத்தவர் உழைப்பினிலே
அசராமல் உயர்ந்திடுவார்

இனங்கண்டு இவரையெல்லாம்
ஒதுக்கி விடலாமே -அவர்
தோலுரித்து வெளி உலகம்
காட்டிடவோம் நாமே

எழுதியவர் : அறந்தை ரவிராஜன் (6-Dec-23, 10:19 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : ivar
பார்வை : 41

மேலே