மண் lகுதிரை
மண்குதிரை சிற்பம்
கண்ணை கவரும்//
கவரும் நேரமெல்லாம் அழகூட்டும் நெஞ்சுக்கு//
நெஞ்சுக்கு அதன்மேல் பயணிக்கத் தோன்றும்//
தோன்றும் போதெல்லாம்
பழமொழி நினைவுக்கு//
நினைவுக்கு வருவதெல்லாம்
பெரியவர்கள் சொன்னதே//
சொன்னது இன்றும்
ஒலிக்கிறது செவிகளில்//
செவிகளில் விழும்
சொற்களாக நடக்கிறேன்//
நடக்கின்ற போது
உடையும் மண்குதிரை//
பரமகுரு பச்சையப்பன்