பேரிட ரைத்தந்து பெய்துதீர்த்த பேய்மழை

பேரிட ரைத்தந்து பெய்துதீர்த்த பேய்மழை
ஊரெல்லாம் வெள்ளம் உறைவிடம் உண்டியில்லை
காரோடும் நல்வீதி தன்னிலே நீரோட
போராடும் மக்களின் கூட்டமோ கண்ணீரில்
யாரிடர் நீக்கிடு வார்

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (7-Dec-23, 9:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே