துடித்து எழு//
இன்று துடித்து
எழு இளைஞனே//
கவலைகளை மறந்து கண்ணெதிரே போகின்ற//
காலத்தை கண்கொண்டு மாற்றிவிட வந்துவிடு//
விதியை மாற்றி
எழுச்சி பிறக்கட்டும்//
எதையும் எளிதாக
எடுத்துச் செல்லாதே//
கடக்கட்டும் என
நின்று விட்டாள்//
உன் உடமையும் போய்விடும் இப்போதே//
ரத்தம் சூடேறட்டும் எதையும் வென்றுவிட//
முயன்று விடு
வெற்றியோ தோல்வியோ//
எது வந்தாலும் கற்றுக்கொள் அழகாகும்//
தண்ணீராக அணை
கட்டியது போதும்//
தடையை உடைத்து எறிந்தது இளைஞனே//