விடியலை விரும்பா இச்சமூகம் போலே புரண்டு புரண்டு துயில்வதோ
துயில்கலைந்தால் தொலைந்திடும் காதல் கனவென
துயிலெழாமல் உறங்குகிறா யோமலர் விழியே
பனிபொழி மார்கழி காற்றுனைத் தழுவிட
பனித்திரை விலக்கி மென்கதிர் இமைவருட
இளங்கிளி எழுவென பறவைகள் துயிலெழுப்ப
விடியலை விரும்பா இச்சமூகம் போலே
புரண்டு புரண்டு துயில்வதோ
காதலன் கேட்கிறேன் கண்விழி மலர்விழியே