நன்மதி வெண்பா - நூல் - பாடல் 6

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

கடனளிப்பா னாயுணூல் கற்றவனெஞ் ஞான்றும்
இடைவறத்த லில்லாத யாறு - கடவு(ண்)மறை
தேர்ந்துணர்ந்த வந்தணர்கள் சேர்நகரி னன்மதியே
சார்ந்திருக்கும் வாழ்வே தகும்! 6

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (15-Dec-23, 5:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே