கந்தனே கூறு களிப்புடன் வாழ்த்து - கலித்துறை
கலித்துறை
(விளம் தேமா விளம் தேமா புளிமாங்காய்)
(’ந்’ ’ன்’ மெல்லின எதுகை)
வந்துனைக் காண வரமருள் கந்தா வழிகாட்டிச்
சிந்தையில் நீயும் சீரென வெண்ணஞ் சிறப்பெய்த
கந்தனே கூறு களிப்புடன் வாழ்த்து கணநேரம்
உன்மனக் கோயில் உவப்புடன் சேர்ந்தே உயர்வேனே!
- வ.க.கன்னியப்பன்