மௌனிகா

மானிடம் பெற்றாயோ மங்கை வடிவினை
வானிலா ஈந்ததோ வண்ணத் திருமுகம்
தேனினை ஏந்திப்பூக் கும்செவ் விதழிரண்டு
மீனினம் சேரும் விழி

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

மானிடம் பெற்றாயோ மங்கை வடிவினை
வானிலா ஈந்ததோ வண்ணமுகம் -மௌனிகா
தேனினை ஏந்திப்பூக் கும்செவ் விதழிரண்டு
மீனினம் சேரும் விழி

----ஒருவிகற்ப நேரிசை வெண்பா


மானிடத்தில் பெற்றாயோ மங்கையுந்தன் வடிவத்தை
வானிலாதான் ஈந்ததோவுன் வண்ணமிகு திருமுகத்தை
தேனினையே ஏந்திப்பூக் கும்நற்செவ் விதழிரண்டும்
மீனினத்தைச் சேர்ந்திடுமோ விழியிரண்டும் சொல்மௌனிகா

-----முற்றிலும் காய் அமைந்த கலிவிருத்தம்


மானிடத்தில் பெற்றாயோ மங்கையுந்தன் வடிவத்தை
வானிலாதான் அளித்ததோவுன் வண்ணமிகு திருமுகத்தை
தேனினையே சுமந்துபூக் கும்நற்செவ் விதழிரண்டும்
மீனினத்தைச் சேர்ந்திடுமோ விழியிரண்டும் நவில்மௌனிகா

---காய்முன் நிரை நிற்கும் கலித்தளை ஏழு வருமாறு மாற்றி அமைத்துப் புனைந்த
தரவு கொச்சகக் கலிப்பா
எல்லாக் கவிதையும் எதுகை மோனையுடன் பொழிகிறது

எழுதியவர் : கவின் சாரலன் (19-Dec-23, 3:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே