தரவு கொச்சகக் கலிப்பாவிற்கு கலித்தளை கண்டிப்பாகத் தேவையா

தரவு கொச்சகக் கலிப்பாவிற்கு கலித்தளை கண்டிப்பாகத் தேவையா?

கலித்தளை இல்லாமல் தரவு கொச்சகக் கலிப்பா வருமா?

இராமன் தயரதனை நினைத்துப் புலம்புதல்!

நந்தா விளக்கு அனைய
நாயகனே! நானிலத்தோர்
தந்தாய்! தனி அறத்தின்
தாயே! தயாநிலையே!
எந்தாய்! இகல் வேந்தர்
ஏறே! இறந்தனையே?
அந்தோ! இனி, வாய்மைக்கு
ஆர் உளரே மற்று? ‘என்றான்.

நந்தா விளக்கனைய நாயகனே! நானிலத்தோர்
தந்தாய்! தனிஅறத்தின் தாயே! தயாநிலையே!
எந்தாய்! இகல்வேந்தர் ஏறே! இறந்தனையே!
அந்தோ! இனி,வாய்மைக்(கு) ஆர்உளரே மற்றென்றான்! 61 திருவடி சூட்டு படலம், அயோத்தியா காண்டம், கம்பராமாயணம்

எழுதியவர் : கம்பர் (25-Dec-23, 11:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே