குறையிலா தேவன் கிறிஸ்து
சிலுவையில் தன்னுயிர் தந்திட்டான் செம்மல்
உலகமாந்தர் உய்ய உயர்கருணை வள்ளல்
இறைவனின் தூதனாய் இன்மொழி தந்தான்
குறையிலா தேவன் கிறிஸ்து
------இருவிகற்ப இன்னிசை வெண்பா
சிலுவையினில் தன்னுயிர் தந்திட்டான் செம்மல்
உலகமாந்தர் உய்திட உயர்கருணை வள்ளல்
நலம்தரும்நற் தூதனாய் நல்மொழிகள் தந்தான்
மலையமரும் தேவனாம் கிறிஸ்துவெனும் ஏசு
-----காய் விளம் காய் மா கலிவிருத்தம்